இந்தியாவை பின்னுக்குத் தள்ளி.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்பெயின்
கிரிக்கெட் விளையாட்டு என்று வரும்போது, ஸ்பெயின் அணியை ஒருபோதும் இந்தியாவுடன் ஒப்பிடப்படாது. ஆனால், ஸ்பெயின் கிரிக்கெட் அணி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையை முறியடித்துள்ளதோடு, டி20 வடிவத்தில் உலக சாதனையையும் படைத்துள்ளது. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 12 நாடுகளில் தொடர்ச்சியாக அதிக டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி ஆப்கான் அணியுடன் இணைந்து கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் சேர்ந்து இந்திய அணி இந்த வடிவத்தில் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஆனால் அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஸ்பெயின் கிரிக்கெட் அணி இப்போது அந்த சாதனையை சொந்தமாக்கியுள்ளது.
ஐரோப்பா டி2ஓ உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டி
ஐரோப்பாவின் குர்ன்சியில் நடந்து வரும் ஐரோப்பா டி20 உலகக் கோப்பை துணைப் பிராந்திய தகுதிச் சுற்று சி போட்டியில் கிரேக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) வென்றதன் மூலம் 14 போட்டிகளில் தொடர்ந்து ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய ஸ்பெயின், தற்போது முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக, மலேசியாவும் பெர்முடாவும் கூட்டாக 13 போட்டிகளை வென்றதன் மூலம் தொடர்ச்சியாக அதிக டி20 போட்டிகளை வென்றதன் மூலம் முதலிடத்தை தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 25, 2023 முதல் ஸ்பெயின் தனது கடைசி 14 ஆட்டங்களில் ஒரு டி20ஐ கூட இழக்கவில்லை.