LOADING...
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
INDvsSA முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி: தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2025
03:16 pm

செய்தி முன்னோட்டம்

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சாம்பியனான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. எய்டன் மார்க்ரம் (31), ரியான் ரிக்கல்டன் (23) மற்றும் வீன் முல்டர், டோனி டி ஜோர்சி தலா 24 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ்

பதிலுக்கு ஆடிய இந்தியா, கே.எல்.ராகுல் (39), வாஷிங்டன் சுந்தர் (29), ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா தலா 27 ரன்கள் அடிக்க, 189 ரன்கள் எடுத்து 30 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா 55 ரன்கள் எடுத்துத் தனி ஒருவராகப் போராட, ரவீந்திர ஜடேஜாவின் 4 விக்கெட் வீழ்த்தலால், தென்னாப்பிரிக்கா 153 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த இலக்கைத் துரத்திய இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.