LOADING...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகல்; பிசிசிஐ அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2025
10:28 am

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் விலகியுள்ளார். முன்னதாக, சனிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, தனது இன்னிங்ஸின் மூன்றாவது பந்தைச் சந்தித்தபோது, ஷுப்மன் கில்லுக்குக் கழுத்துப் பகுதியில் சுளுக்கு (Neck Spasm) ஏற்பட்டது. உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேறிய நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் அவர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிசிசிஐ

பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நேற்று ஏற்பட்டக் கழுத்துக் காயத்தைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் தொடர்ந்து மருத்துவமனைக் கண்காணிப்பில் உள்ளார். அவர் இந்த டெஸ்ட் போட்டியில் மேலும் பங்கேற்க மாட்டார். தொடர்ந்து பிசிசிஐ மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படுவார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷுப்மன் கில் காலையில் இருந்தே கழுத்தில் வலியுடன் எழுந்ததாகவும், நாள் முழுவதும் வலி மோசமடைந்ததாகவும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்தார். ஷுப்மன் கில் காயம் அடைந்து வெளியேறியவுடன், இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸை 189 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. ஷுப்மன் கில் விலகியதையடுத்து, இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டாம் நாள் ஆட்டத்தின் எஞ்சிய பகுதிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ட்விட்டர் அஞ்சல்

பிசிசிஐ அப்டேட்