LOADING...
INDvsENG 5வது டெஸ்ட்: கேப்டனாக 46 வருட சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்
கேப்டனாக 46 வருட சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

INDvsENG 5வது டெஸ்ட்: கேப்டனாக 46 வருட சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்தார் ஷுப்மன் கில்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 31, 2025
06:13 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்துக்கு எதிரான ஓவலில் நடந்து வரும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 737* ரன்கள் எடுத்து, டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற வரலாற்றை ஷுப்மன் கில் படைத்துள்ளார். இதன் மூலம், 1978-79ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது சுனில் கவாஸ்கரின் 732 ரன்கள் என்ற நீண்டகால சாதனையை முறியடித்துள்ளார். போட்டியின் முதல் நாள் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஜேமி ஓவர்டனின் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து, தனது 11வது ரன் மூலம் ஷுப்மன் கில் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த குறிப்பிடத்தக்க சாதனை, முன்னாள் இந்திய கேப்டன்களை விட ஷுப்மன் கில்லை முன்னிலைப்படுத்துகிறது.

கேப்டன்கள்

அதிக ரன் குவித்த இந்திய கேப்டன்கள்

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் பட்டியலில் ஷுப்மன் கில் தற்போது முதலிடத்திலும், சுனில் கவாஸ்கர் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, விராட் கோலி, 2016-17இல் இங்கிலாந்துக்கு எதிராக 655, 2017-18 இல் இலங்கைக்கு எதிராக 610 மற்றும் 2018 இல் இங்கிலாந்துக்கு எதிராக 593 ரன்களுடன் 3, 4 மற்றும் ஐந்தாவது இடங்களை தக்க வைத்துள்ளார். இதற்கிடையே, ஷுப்மன் கில், இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு, ஒரு இரட்டை சதம் (269) உட்பட நான்கு சதங்களை அடித்துள்ளார். இது ஒரு டெஸ்ட் தொடரில் எந்தவொரு இந்திய கேப்டனுக்கும் மிக அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

டான் பிராட்மேன்

டான் பிராட்மேனின் சாதனையை நெருங்கும் ஷுப்மன் கில்

தற்போது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்களில் சர்வதேச அளவில் முதலிடத்தில் இருக்கும் டான் பிராட்மேனின் அனைத்து கால 810 ரன்கள் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ஷுப்மன் கில் உள்ளார். இதற்கு ஷுப்மன் கில்லுக்கு இன்னும் 89 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. தொடரில் 2-1 என பின்தங்கியிருந்தாலும், இந்தியாவின் இளம் கேப்டன் முன்னணியில் இருந்து உறுதியாக வழிநடத்தியுள்ளார்.