
ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்!
செய்தி முன்னோட்டம்
வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இடம் பெற்றுள்ள நிலையில் ஐபிஎல் 2023 சீசனிலிருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிராக வங்கதேச போட்டியின் காரணமாக அவர் கடந்த வாரம் மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கேகேஆரின் தொடக்க போட்டியை தவறவிட்டார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) டாக்காவில் தொடங்கவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடியும் வரை ஐபிஎல்லில் சேர கேப்டன் ஷாகிப் மற்றும் துணை கேப்டன் லிட்டன் தாஸ் ஆகியோருக்கு அனுமதி மறுத்துள்ளது.
கேகேஆர் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் காயத்தால் அவதிப்படும் நிலையில், அவருக்கு பதிலாக நிதிஷ் ராணா கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஷாகிப் அல் ஹசன் விலகல்
📢 BREAKING: Shakib Al Hasan has decided to skip the entire #IPL2023 over availability issues. Kolkata Knight Riders to decide on the replacement player soon. #KKR pic.twitter.com/4pobTipdE4
— RevSportz (@RevSportz) April 3, 2023