சவுதி அரேபியாவில் டி20 கிரிக்கெட் லீக் : ஐபிஎல் அணிகளுடன் பேச்சுவார்த்தை
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபிய அரசாங்கம் வளைகுடா பிராந்தியத்தில் டி20 கிரிக்கெட் லீக்கை அமைக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் அவர்கள் இதற்காக ஐபிஎல் உரிமையாளர்களுக்கு திட்டங்களை முன்மொழிந்துள்ளனர்.
சமீப காலமாக சவுதி அரேபிய அரசாங்கம் பல விளையாட்டுகளில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது.
சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ் மற்றும் எல்ஐவி கோல்ஃப் மூலம் ஃபார்முலா 1 க்குள் நுழைந்த நிலையில், அவர்களின் அடுத்த இலக்கு கிரிக்கெட்டின் மீது திரும்பியுள்ளது.
சவுதியில் உலகின் பணக்கார டி20 லீக்கைக் கொண்டு வர அந்நாடு திட்டமிட்டுள்ளது.
மேலும் அவர்கள் ஐபிஎல் 2023 சீசனுக்கான ஸ்பான்சர்களாக வந்து, இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களை அணுகியுள்ளனர்.
Does BCCI rules permit Indian Players
இந்திய கிரிக்கெட் வாரிய விதிகள் இந்திய வீரர்களை அனுமதிக்குமா?
பிசிசிஐ தற்போதைய விதிகளின்படி, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்திய வீரர்களை அனுமதிக்க சவுதி அரேபிய அரசாங்க பிரதிநிதிகள் முன்மொழிந்துள்ள நிலையில், அதை பிசிசிஐ ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் அதற்காக விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
தி ஏஜ் பத்திரிகையின் அறிக்கையின்படி, சவுதி அரேபிய லீக் தொடர்பான பேச்சுக்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடந்து வருகின்றன.
விரைவில் இது குறித்து நல்ல தகவல் வெளியாகும் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே, கால்பந்து மற்றும் எஃப் 1 போன்ற பிற விளையாட்டுகளுக்கு நிதியை செலுத்திய பின்னர், கிரிக்கெட்டில் அதிக முதலீடு செய்ய சவுதி அரேபியா விரும்புகிறது என்பதை உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.