
துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங்
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (மார்ச் 22) நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் பிஸ்டல்/ரைபிள் உலகக் கோப்பையில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் ஆடவர் ஏர் பிஸ்டல் தங்கப் பதக்கத்தை வென்று, போட்டிகளின் முதல் நாளிலேயே இந்திய அணியின் பதக்க கணக்கை தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் மற்றொரு வீரர் வருண் தோமரும் வெண்கலம் வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
முன்னதாக தகுதிச் சுற்றிலும் இந்திய வீரர் சரப்ஜோத் ஆறு சுற்றுகள் முடிவில் மொத்தமாக 585 புள்ளிகள் பெற்றார். இதில் வரும் தோமர் 579 புள்ளிகள் பெற்று எட்டாவது இடம் பிடித்து மயிரிழையில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.
இறுதியில், சரப்ஜோத் முதலிடமும் தோமர் மூன்றாம் இடமும் பிடித்து பதக்கத்தை கைப்பற்றினர்.
ட்விட்டர் அஞ்சல்
இந்தியாவிற்கு முதல் தங்கம்
Sarabjot Singh of India 🇮🇳 wins Gold🥇in Men’s 10m Air Pistol on the opening day of the ISSF World Cup in Bhopal, India. #indianshooting pic.twitter.com/0F98qUKUVc
— indianshooting.com (@indianshooting) March 22, 2023