Page Loader
சஞ்சு சாம்சனை விளாசும் கிரிக்கெட் ரசிகர்கள்; எக்ஸ் தளத்தில் குவியும் மீம்ஸ்
சஞ்சு சாம்சனை விளாசும் கிரிக்கெட் ரசிகர்கள்; எக்ஸ் தளத்தில் குவியும் மீம்ஸ்

சஞ்சு சாம்சனை விளாசும் கிரிக்கெட் ரசிகர்கள்; எக்ஸ் தளத்தில் குவியும் மீம்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 14, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட சில வீரர்கள் தங்கள் முழுமையான செயல்திறனை வெளிப்படுத்தி நல்ல கவனம் ஈர்த்த நிலையில், மோசமான விதமாக விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன் கவனம் ஈர்த்துள்ளார். ஒவ்வொரு தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்படும்போதும், கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு முறையான வாய்ப்புகளை வழங்கவில்லை என கண்டனம் தெரிவித்து வருவது வழக்கமாக இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, டி20 தொடரில் முழுமையாக இடம் பெற்ற சஞ்சு சாம்சனுக்கு மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

sanju samson flop show in west indies

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறிய சஞ்சு சாம்சன்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் தான் பேட்டிங் செய்த மூன்று இன்னிங்ஸ்களிலும் 12, 7, 13 என சொற்ப ரன்களை மட்டுமே சஞ்சு சாம்சன் எடுத்தார். இதனால் விரக்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக ஊடக தளத்தில், இதுவரை ஒவ்வொருமுறை அணி அறிவிக்கப்படும்போதும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டதற்காக வருத்தப்பட்டும், சஞ்சு சாம்சனின் மோசமான செயல்திறனை விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும், கேஎல் ராகுலின் உடற்தகுதியைப் பொறுத்து அவரது பங்கேற்பு இருக்கும் என்றும் தெரிவித்தார்.