ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் : ரஷீத் கானின் சாதனையை முறியடித்த நேபாள வீரர்
செய்தி முன்னோட்டம்
நேபாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
தற்போது நடந்து வரும் ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பையில் ஓமனுக்கு எதிரான போட்டியில் லாமிச்சானே இந்த சாதனையை படைத்தார்.
42வது போட்டியில் அவர் இந்த இலக்கை எட்டியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 44 போட்டிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது லாமிச்சானே அதை முறியடித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் 52 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இதில் மூன்றாவது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Sandeep Lamichhane completes his 100th wicket in ODIs and becomes the fastest ever to get this in just 42 matches, the previous record was of Rashid Khan (44 Matches).
— CricTracker (@Cricketracker) April 21, 2023
He achieved this feat in his 42nd game in ACC Men's Premier Cup match vs Oman.#CricTracker | @Sandeep25 pic.twitter.com/YjREwgW7VM