LOADING...
ஷ்ரேயாஸ் ஐயரின் அசாத்திய கேட்ச்: "நான் பார்த்ததிலேயே சிறந்தது!" சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
ஷ்ரேயாஸ் ஐயரின் அசாத்திய கேட்ச்சிற்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

ஷ்ரேயாஸ் ஐயரின் அசாத்திய கேட்ச்: "நான் பார்த்ததிலேயே சிறந்தது!" சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 17, 2026
04:18 pm

செய்தி முன்னோட்டம்

கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனையோ சிறப்பான தருணங்களைக் கண்டவர். ஆனால், வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் எடுத்த அந்த ரிலே கேட்ச் சச்சினையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தான் நேரலையில் பார்த்த மிகச்சிறந்த கேட்சுகளில் இதுவும் ஒன்று என சச்சின் ஐயரை மனதாரப் பாராட்டியுள்ளார். கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் ஒருவரிடமிருந்து இத்தகைய பாராட்டு கிடைப்பது ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

சச்சின் விளக்கம்

ஷ்ரேயாஸ் ஐயரின் கேட்ச் ஏன் இவ்வளவு சிறப்பு?

ஷ்ரேயாஸ் ஐயரின் அந்தரத்தில் பறக்கும் வித்தை குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அந்தப் பந்து வீசப்பட்ட வேகம், அதன் உயரம் மற்றும் பவுண்டரி எல்லைக் கோடு எங்கே இருக்கிறது என்பதை ஒரு நொடியில் கணித்து ஷ்ரேயாஸ் ஐயர் குதித்த விதம் ஈடுஇணையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெறும் உடற்தகுதி மட்டுமல்லாமல், அந்த இக்கட்டான சூழலிலும் தனது சக வீரர் சேவியர் பார்ட்லெட் எங்கே நிற்கிறார் என்பதை உணர்ந்து, தான் பவுண்டரிக்கு வெளியே விழுவதற்குள் பந்தை அவரிடம் வீசிய அந்த சமயோசித புத்தி தான் இந்த கேட்சை உலகத் தரமானதாக மாற்றியது என சச்சின் வியந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement