மூன்று ஆண்டு காத்திருப்புக்கு முடிவு: பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மா புதிய சாதனை!
செய்தி முன்னோட்டம்
இந்தூரில் நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியின் போது ரோஹித் சர்மா சதமடித்து மூன்று ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இன்று தனது 30வது சதத்தை அடித்ததன் மூலம், ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத் தள்ளி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, ரிக்கி பாண்டிங் 375 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 30 சதங்கள் விளாசினார். ஆனால் ரோஹித் தனது 241வது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.
அதிக சதங்கள்
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் : முதல் மூன்று இடத்தில் இந்தியர்கள்
ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் விராட் கோலி 46 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 30 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறி வந்த ரோஹித், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார்.
தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் எவரும் நெருங்க முடியாத இடத்தில் இவர்கள் இருப்பதால், நீண்ட காலத்திற்கு இந்தியர்களின் ஆதிக்கத்தை இதில் முறியடிக்க முடியாது என்பது உறுதி.
இந்த பட்டியலில் ரோஹித்துக்கு அடுத்தபடியாக 10வது இடத்தில் சவுரவ் கங்குலி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.