தேர்வுக்குழு கூறிய செய்தியால் ஆத்திரம்? ரோஹித் ஷர்மா ஓய்வு பெறத் தயார் என அதிரடி; பிசிசிஐ முடிவு என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் ஷர்மாவின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மும்பையில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ஏற்கனவே 2024ல் டி20 போட்டிகளிலிருந்தும், 2025ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட ரோஹித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளிலிருந்தும் விரைவில் ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு பிசிசிஐ இந்த ஆலோசனையை நடத்துகிறது.
தேர்வுக்குழு
தேர்வுக்குழுவின் தகவலும் ரோஹித் ஷர்மாவின் கோபமும்
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் ரோஹித் ஷர்மாவைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கத் தேர்வுக்குழு முடிவு செய்துவிட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியோடு தனது ஓய்வு முடிவை அறிவிக்குமாறும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலால் ரோஹித் ஷா ர்மா கடும் ஆத்திரமடைந்த போதிலும், ஓய்வு பெற ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மோதல் போக்கு
லார்ட்ஸ் சதமும் பிசிசிஐ நிர்வாகத்தில் எழுந்த மோதலும்
இருப்பினும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் ஷர்மா 138 ரன்கள் குவித்து அபார சதம் அடித்தார்.
இந்த சதத்தால் அவரது ஓய்வு குறித்த பேச்சுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, ரோஹித் ஷர்மா தொடர்ந்து அணியில் நீடிப்பார் என அறிவித்தார்.
பிசிசிஐ செயலாளரின் இந்தத் தலையீடு, அஜீத் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பிசிசிஐ நிர்வாகத்தினரிடையே மோதலையும் உருவாக்கியுள்ளது.
அஜீத் அகர்கரின் பதவி
அஜீத் அகர்கரின் பதவி நிலவரமும் புதிய மாற்றமும்
இந்த மோதல் காரணமாக முதன்மைத் தேர்வாளர் அஜீத் அகர்கரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2027 உலகக்கோப்பை வரை தனது பதவியைக் நீட்டிக்க அகர்கர் எதிர்பார்த்த நிலையில், அவரை மாற்றிவிட்டு விவிஎஸ் லக்ஷ்மணைக் கொண்டுவர பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.
ரோஹித் ஷர்மா தவிர்த்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் எதிர்காலம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.