நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஒருநாள் சிக்ஸர்கள்: ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ரோஹித் ஷர்மா புதிய சாதனை படைத்துள்ளார். வெல்லிங்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில், கைல் ஜேமிசன் வீசிய ஓவர்களில் இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டதன் மூலம் அப்ரிடியின் 50 சிக்ஸர்கள் என்ற சாதனையைத் தகர்த்து, 51 சிக்ஸர்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 36 ஒருநாள் போட்டிகளில் 34 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த இமாலய சாதனையை அவர் வசப்படுத்தியுள்ளார்.
முதலிடம்
அப்ரிடி, கெயிலை பின்னுக்கு தள்ளி முதலிடம்
நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஷாகித் அப்ரிடி 38 போட்டிகளில் 50 சிக்ஸர்களுடன் இதுவரை முதலிடத்தில் இருந்தார்.
தற்போது 51 சிக்ஸர்களுடன் ரோஹித் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 45 சிக்ஸர்களுடனும், இலங்கையின் சனத் ஜெயசூர்யா 41 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
விராட் கோலி மற்றும் ஜோஸ் பட்லர் தலா 29 சிக்ஸர்களுடன் இப்பட்டியலில் பின்தொடர்கின்றனர். தொடக்கப் போட்டியில் டக் அவுட்டான ரோஹித், இப்போட்டியில் 23 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது அபார மீள்வருகையைப் பதிவு செய்துள்ளார்.
கிறிஸ் கெயில்
சர்வதேச சாதனையை நோக்கி ரோஹித்
ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று சர்வதேச வடிவங்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நோக்கி ரோஹித் முன்னேறி வருகிறார்.
கிறிஸ் கெயில் 87 சிக்ஸர்களுடன் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ள நிலையில், ரோஹித் சர்மா தற்போது 85 சிக்ஸர்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
அடுத்து வரும் 3 ஒருநாள் போட்டிகளில் இன்னும் 3 சிக்ஸர்களை விளாசினால் கெயிலின் சாதனையை ரோஹித் முறியடிப்பார்.
மேலும், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஏற்கனவே 100 சிக்ஸர்களைக் கடந்துள்ள ரோஹித், நியூசிலாந்துக்கு எதிராகவும் சிக்ஸர் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.