CT 2025: தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரோஹித் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி 9,000 ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இந்த போட்டி தொடங்கும் முன் அவர் இந்த மைல்க்கை எட்ட ஒரு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த போட்டியில் 20 ரன்கள் எடுத்தார்.
சச்சின் டெண்டுல்கர் 197 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், ரோஹித் ஷர்மா 181 இன்னிங்ஸ்களில் எட்டி சாதனை படைத்தார்.
முன்னதாக, 2023இல் தொடக்க வீரராக 8,000 ரன்களை வேகமாக எட்டியவர் என்ற பெருமையையும் அவர் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆறாவது வீரர்
ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் ஆறாவது வீரர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9,000 ஒருநாள் ரன்களை கடந்த ஆறாவது தொடக்க வீரர் என்ற பெருமையையும் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (15,310), சனத் ஜெயசூர்யா (12,740), கிறிஸ் கெய்ல் (10,179), ஆடம் கில்கிறிஸ்ட் (9,200), மற்றும் சவுரவ் கங்குலி (9,146) ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இதற்கிடையே, முந்தைய பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் 11,000 ஒருநாள் ரன்களை வேகமாக எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.
55க்கும் மேற்பட்ட சராசரியுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 3,000 ரன்கள் எடுத்தவர்களில் ரோஹித் ஷர்மா அதிக சராசரியுடன் முன்னிலை வகிக்கிறார்.