Page Loader
ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த ரோஹன் போபண்ணா; உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்
உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த ரோஹன் போபண்ணா

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த ரோஹன் போபண்ணா; உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2024
10:28 am

செய்தி முன்னோட்டம்

43 வயதான இந்தியாவின் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்குள் நுழைந்து சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம், ஏடிபி ஆடவர் இரட்டையர் தரவரிசையில் முதல் முறையாக, உலகின் நம்பர் 1 இடத்தை இடத்தை பிடித்த இந்தியர் என செய்திகள் தெரிவிக்கின்றன. ரோஹன், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து அர்ஜென்டினா ஜோடிகளான மாக்சிமோ கோன்சாலஸ் மற்றும் ஆண்ட்ரேஸ் மோல்டெனியை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். இது அவரது நெடுங்கால டென்னிஸ் பயணித்தில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இது அவரது 17வது சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். முன்னதாக, டென்னிஸ் ஓபன் சகாப்தத்தில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை எட்டிய மிக வயதான வீரர் ரோஹன் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஆஸ்திரேலியா ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த ரோஹன் போபண்ணா

ட்விட்டர் அஞ்சல்

ரோஹன் போபண்ணா கூறுவது என்ன?