இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20I: பத்திரிகையாளர்கள் அறையின் கண்ணாடியை தெறிக்க விட்ட ரிங்கு சிங்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவினாலும், ரிங்கு சிங் அதிரடியாக விளையாடினார். கியூபெர்ஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் 68 ரன்கள் சேர்த்த ரிங்கு சிங் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தையும் பதிவு செய்தார். இந்நிலையில், தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடென் மார்க்ராமின் இரண்டு பந்துகளை ரிங்கு சிங் சிக்ஸர் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, அவர் அடித்த இரண்டாவது சிக்ஸரின் போது பந்து பத்திரிகை ஊழியர்கள் அமர்ந்திருந்த தளத்தின் கண்ணாடியை உடைத்தது. இந்த போட்டியில் மழையால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.