மைதானத்தில் மலிங்கா -கோலி செய்த காரியம்! வைரலாகும் ஆர்சிபி -எம்ஐ வீரர்களின் கலகலப்பான வீடியோ
செய்தி முன்னோட்டம்
ராய்ப்பூரில் உள்ள ஷாஹித் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் ஐபிஎல் 2026-ன் 54-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதின. அதில் RCB அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் IPL தொடரிலிருந்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ். எனினும், இந்தப் போட்டிக்கு முன்னதாக நடந்த பயிற்சி அமர்வில், கிரிக்கெட் உலகின் இரு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் லசித் மலிங்கா ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Look at the way Virat Kohli met Lasith Malinga and Shardul Thakur during RCB’s practice session in Raipur. ❤
— Sonu (@Cricket_live247) May 9, 2026
After their short meeting, the rain started and Virat Kohli began running on the ground, because of which RCB’s practice session in Raipur was eventually stopped. 🌧️😂 pic.twitter.com/SDKVv3m8uT
நட்பு
மழையிலும் ஜொலித்த நட்பு
ராய்ப்பூரில் பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது மைதானத்தின் அருகே விராட் கோலி, மும்பை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான லசித் மலிங்கா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருடன் நீண்ட நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். களத்தில் பரம எதிரிகளாகப் போராடிய இவர்கள், தற்போது ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதை மற்றும் நட்பு ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மலிங்கா மற்றும் கோலி இடையிலான மோதல் எப்போதும் சுவாரஸ்யமானது. மலிங்காவின் பந்துவீச்சில் கோலி 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஐபிஎல் தொடரில் மலிங்கா ஒருமுறை கூட கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதில்லை.