
ரமேஷ் புத்தியலுக்கு வெண்கலம்; ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்றது இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையை இந்தியாவின் ரமேஷ் புத்தியல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) படைத்தார். சென்னையில் நடைபெற்ற ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் ஓபன் ஆண்கள் பிரிவில் போட்டியிட்ட ரமேஷ் புத்தியல் 12.60 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். இது இந்திய சர்ஃபிங்கிற்கான ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் பிரிவில் தங்கப் பதக்கம் கொரியாவின் கனோவா ஹீஜே 15.17 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தோனேசியாவின் பஜார் அரியானா 14.57 புள்ளிகளுடன் வெள்ளியையும் வென்றனர். ஓபன் பெண்கள் பிரிவில், ஜப்பானின் அன்ரி மாட்சுனோ 14.90 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
சிறுவர் பிரிவு
18 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவு
ஓபன் பெண்கள் பிரிவில் ஜப்பான் நாட்டவரான சுமோமோ சாடோவை 13.70 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்தின் இசபெல் ஹிக்ஸ் 11.76 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். 18 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் கொரியாவின் கனோவா ஹீஜே 14.33 புள்ளிகளுடன் தங்கம் வென்று தனது ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தினார். சீனாவின் ஷிடோங் வு 13.10 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஷுலோ ஜியாங் 8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், சீனாவின் சிகி யாங் 14.50 புள்ளிகளுடன் தனது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தையும், சக வீராங்கனை ஷுஹான் ஜின் 10.33 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். தாய்லாந்தின் இசபெல் 8.10 புள்ளிகளுடன் மீண்டும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.