Ind vs Aus: இந்திய U-19 கிரிக்கெட் அணியில் டிராவிட் மற்றும் சேவாக் மகன்கள் தேர்வு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரின் மகன்களான அன்வய் டிராவிட் மற்றும் ஆர்யவீர் சேவாக் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தச் சுற்றுப்பயணத்திற்காக தொடர்களுக்கான தனித்தனி அணிகளை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் 18 வயதான ஆர்யவீர் சேவாக்கிற்கு, இந்திய U-19 அணியில் இடம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். 17 வயது அன்வய் டிராவிட், ஏற்கனவே கடந்த மாதம் இலங்கை சென்று விளையாடிய இந்திய U-19 ஒருநாள் அணியில் இடம்பெற்று அசத்தியதால் தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
போட்டிகள் நிலவரம்
அணித் தலைவர்கள் மற்றும் போட்டிகள் நிலவரம்
ஒருநாள் தொடருக்கான இந்திய U-19 அணிக்கு லக்ஷ்யா ராய்ச்சந்தானி கேப்டனாகவும், யஷ்பர்தன் சிங் சவுகான் வைஸ்-கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல நாட்கள் கொண்ட போட்டித் தொடருக்கு யஷ்பர்தன் சிங் சவுகான் கேப்டனாகவும், லக்ஷ்யா ராய்ச்சந்தானி வைஸ்-கேப்டனாகவும் செயல்படுவர்.
அன்வய் மற்றும் ஆர்யவீர் ஆகிய இருவருமே ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் முதலாவது பல நாட்கள் போட்டியும் ராஜ்கோட்டிலும், இரண்டாவது பல நாட்கள் போட்டி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 News 🚨
— BCCI (@BCCI) August 27, 2026
India U19 squad for Australia U19 Men’s Tour of India announced.
The tour consists of three One-Day matches and two Multi-Day fixtures.
Venues 🏟️: Rajkot and Ahmedabad
More Details ▶️ https://t.co/o2pF8bj3RJ
#INDU19vAUSU19 pic.twitter.com/Ud0tvcqaBe