LOADING...
ஐபிஎல் 2026: 25 கோடி கொடுத்துட்டு ஒரு ஓவர் மட்டும் வீசினா எப்படி? அஸ்வின் அதிரடிஆலோசனை
ரவிச்சந்திரன் அஸ்வின்

ஐபிஎல் 2026: 25 கோடி கொடுத்துட்டு ஒரு ஓவர் மட்டும் வீசினா எப்படி? அஸ்வின் அதிரடிஆலோசனை

எழுதியவர் Sekar Chinnappan
Mar 22, 2026
11:00 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சர்ச்சைக்குரிய, ஆனால் சுவாரஸ்யமான கருத்தை முன்வைத்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ஒரு வீரர் தனது முழுமையான பங்களிப்பை அளிக்கத் தவறினால், அவரது ஊதியத்தில் ஒரு பகுதியை நிர்வாகம் கழிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கூடுதல் விவரங்கள் இங்கே:-

கேமரூன் கிரீன்

கேமரூன் கிரீன் விவகாரம்

இந்தக் கருத்தை விளக்க அஸ்வின், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியால் ₹25.2 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை உதாரணமாகக் காட்டினார். ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் கேமரூன் கிரீன். ஆனால், சமீபத்திய ஆஷஸ் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பையில் கிரீன் மிகக் குறைந்த ஓவர்களே பந்து வீசியுள்ளார். முதுகு வலி காயத்திலிருந்து மீண்டுள்ளதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை ஐபிஎல் தொடரில் முழுமையாகப் பந்து வீச அனுமதிக்காமல் போக வாய்ப்புள்ளது.

முன்மொழிவு

அஸ்வினின் முன்மொழிவு

'நீங்கள் ஷாருக்கானாக (கேகேஆர் உரிமையாளர்) இருந்து, ஒரு வீரருக்கு 25 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் வந்து, சார், என்னால் இன்று ஒரு ஓவர் தான் வீச முடியும் என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?' என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இதற்கு அவர் பின்வரும் சில தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளார். ஒரு வீரர் ஆல்ரவுண்டராக ஏலத்திற்கு வரும்போது, அவர் நான்கு ஓவர்களும் வீச வேண்டும் மற்றும் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே வாங்கப்படுகிறார். அப்படியிருக்கையில், குறைவாக செயல்படும்போது அவரது சம்பளத்தில் 2 கோடியைக் குறைக்க ஏன் உரிமை இருக்கக்கூடாது என்று கேட்டுள்ளார். கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் ஐபிஎல் உரிமையாளர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க இது போன்ற விதிகள் அவசியம் என கருதுகிறார்.

Advertisement