
புரோ கபடி லீக் : டெல்லியை பந்தாடி வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ்
செய்தி முன்னோட்டம்
புரோ கபடி லீக் பத்தாவது சீசனில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தபாங் டெல்லியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.
போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் கடுமையாக மோதினாலும், பின்னர் ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. முதல் பாதியில் ஒருமுறை தபாங் டெல்லியை முழுமையாக அவுட்டாக்கிய தலைவாஸ், 18-14 என முன்னிலை பெற்றனர்.
மேலும், இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த தமிழ் தலைவாஸ் மேலும் ஒருமுறை தபாங் டெல்லியை முழுமையாக அவுட்டாக்கி வெற்றியை உறுதி செய்தது.
இறுதியில் 42-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று பத்தாவது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் பெங்களூர் புல்ஸை வீழ்த்தியது.
ட்விட்டர் அஞ்சல்
தமிழ் தலைவாஸ் வெற்றி
Off to a good start!#IdhuNammaTeam | #GiveItAllMachi | #TamilThalaivas pic.twitter.com/aEROXyoWli
— Tamil Thalaivas (@tamilthalaivas) December 3, 2023