ஓசேன்ஸ் செவன் சவாலை முறியடித்த மிக இளம் வயது வீரர் : இந்தியாவின் பிரபாத் கோலி சாதனை
23 வயதான இந்திய நீச்சல் வீரர் பிரபாத் கோலி மிகவும் சோதனையான ஓசேன்ஸ் செவன் சவாலை முடித்து, இதை செய்த மிக இளம் வயதினர் என்ற சாதனையை படைத்துள்ளார். நீண்ட தூர நீச்சல் வீரரான பிரபாத் நியூசிலாந்தில் உள்ள குக் ஸ்ட்ரெய்ட் வழியாக நீந்தியபோது சவாலை முடித்தார். சவாலான வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் 28 கிமீ நீளத்தை 8 மணி நேரம் 41 நிமிடங்களில் கடந்தார். உலக ஓப்பன் வாட்டர்ஸ் நீச்சல் சங்கம் மற்றும் மராத்தான் நீச்சல் கூட்டமைப்பு ஆகியவை பிரபாத்தின் சாதனையை அங்கீகரித்துள்ளன.
ஓசேன்ஸ் செவன் என்பது என்ன?
ஓசேன்ஸ் செவன் என்பது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இடையேயான ஆங்கில கால்வாய், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையே வடக்கு கால்வாய், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ இடையே ஜிப்ரால்டர் ஜலசந்தி, சாண்டா கேடலினா தீவிற்கு இடையே உள்ள கேடலினா கால்வாய் மற்றும் கலிபோர்னியா-ஓஹூ இடையே உள்ள மொலோகாய் கால்வாய், ஜப்பானில் ஹோன்சு மற்றும் ஹொக்கைடோ இடையே உள்ள சுகாரு நீரிணை மற்றும் நியூசிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு தீவுகளுக்கு இடையே உள்ள குக் ஜலசந்தி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த 7 கடற்பகுதிகளையும் நீந்தி கடந்து பிரபாத் கோலி சாதனை படைத்துள்ளார். தனது 15 ஆண்டுகால நீச்சல் வாழ்க்கையில் இது மகிழ்ச்சியான தருணம் என பிரபாத் சாதனையை படைத்த பின்னர் கூறினார்,