Page Loader
'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி
கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி

'பிரான்ஸை விட இந்தியாவில் அதிக பிரபலம்' ; கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே குறித்து பேசிய பிரதமர் மோடி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 14, 2023
01:10 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வியாழன் (ஜூலை 13) அன்று பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான கைலியன் எம்பாபே குறித்து பேசியுள்ளார். பாரிஸில் உள்ள லா சீன் மியூசிகேலில் இந்தியர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே இந்தியாவில் உள்ள இளைஞர்களிடையே சூப்பர்ஹிட் ஆகி வருகிறார். எம்பாபேவுக்கு பிரான்ஸில் உள்ளதை இந்தியாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்." என்று கூறினார். பிரெஞ்சு லீக் மற்றும் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் எம்பாபே, தற்போது உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான அவரது ஹாட்ரிக், உலகம் முழுவதும் அவரது பிரபலத்தை அதிகரித்தது.

ட்விட்டர் அஞ்சல்

கைலியன் எம்பாபே குறித்து மோடி பேச்சு