2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம்: கிராம் கணக்கில் எடை கூடியதால் ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகட் தகுதி நீக்கம்
மல்யுத்த வீரர் வினேஷ் போகட்50 கிலோ பிரிவில் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். "மகளிர் மல்யுத்த 50 கிலோ வகுப்பில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது.இன்று காலை அவர் 50 கிலோவுக்கு மேல் சில கிராம் எடையுடன் இருந்தார்"என்று IOA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இறுதி போட்டியில் தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த நேரத்தில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், வெண்கல பதக்கம் கூட அவருக்கு கிடைக்காது என செய்திகள் தெரிவிக்கின்றன.
Twitter Post
போகட் வெள்ளிப் பதக்கத்துக்குத் தகுதி பெற மாட்டார்
வினேஷ் போகாட் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்ட்டை எதிர்த்துப் போட்டியிட திட்டமிடப்பட்டிருந்தது. அவர் இதற்கு முன்பு தோற்கடிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனை. இருப்பினும், போகட்டின் எடைப் பிரச்சினை காரணமாக, ஹில்டெப்ராண்டிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டி விதிகளின்படி, போகட் வெள்ளிப் பதக்கத்திற்குத் தகுதிபெற மாட்டார். இதன் விளைவாக 50 கிலோ பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றவர்கள் மட்டுமே உள்ளனர்.