அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் கம்ரான் அக்மல்!
பாகிஸ்தானின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்டர் கம்ரான் அக்மல், செவ்வாய்கிழமை (பிப்ரவரி 7) அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில் தேசிய தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அக்மல், இப்போது தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். 41 வயதான கம்ரான் கடைசியாக 2017இல் பாகிஸ்தானுக்காக விளையாடினார். அவர் பாகிஸ்தானின் மிகவும் வெற்றிகரமான கீப்பர்-பேட்டர்களில் ஒருவர் ஆவார். ஓய்வு குறித்து கூறுகையில், "பிசிபியில் புதிய பொறுப்புகள் காரணமாக நான் இனி கிரிக்கெட் விளையாட மாட்டேன். அதே சமயம் அனுமதி கிடைக்கும்பட்சத்தில், லீக் போட்டிகளில் விளையாடுவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
கம்ரான் அக்மலின் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
நவம்பர் 2002இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான அக்மல், 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,648 ரன்களை. இந்த எண்ணிக்கையில் 6 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் அடங்கும். அவர் 157 ஒருநாள் போட்டிகளில் 3,236 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில், அவர் 58 ஆட்டங்களில் 987 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து அரை சதங்கள் அடங்கும். 2009 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் ஒரு அங்கமாக இருந்தார். மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஹரூன் ரஷீத் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் சமீபத்தில் அக்மல் இடம்பிடித்தார். அவர் மேலும், பிசிபியின் ஜூனியர் செலக்ஷன் கமிட்டியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.