Page Loader
கண்ணாடியே அணியாமல் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஒலிம்பிக் ஐகான் யூசுப் டிகெக்; வைரலாகும் பழைய காணொளி 
யூசுப் டிகெக்

கண்ணாடியே அணியாமல் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற ஒலிம்பிக் ஐகான் யூசுப் டிகெக்; வைரலாகும் பழைய காணொளி 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 05, 2024
05:09 pm

செய்தி முன்னோட்டம்

தனது பாக்கெட்டில் ஒரு கையுடன் வழக்கமான கண்ணாடி அணிந்தபடி, துருக்கியின் யூசுப் டிகெக் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளி வென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 51 வயதான நிலையிலும், அதிக தொழில்முறை உபகரணங்கள் எதுவும் இல்லாமல் அவரது சாதாரண தோற்றம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இருப்பினும், 2011இல் நடந்த ஒரு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், கண்ணாடி கூட அணியாமல் மிகவும் சாதாரணமாக அவர் பங்கேற்றது குறித்த வீடியோ ஒன்றை சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) வெளியிட்டுள்ளது. அந்த போட்டியில் ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் டிகெக் தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த வீடியோவை ஐஎஸ்எஸ்எப் வெளியிட்டுள்ள நிலையில், இதுவும் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

யூசுப் டிகெக்கின் வைரலாகும் பழைய காணொளி