LOADING...
NZvsSL : இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

NZvsSL : இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2023
12:00 pm

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) அன்று நடக்கவிருந்த நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. போட்டி பகலிரவு ஆட்டமாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாள் முழுவதும் கனமழை பெய்தது. உள்ளூர் நேரப்படி மாலை 4:25 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் போட்டியைக் கைவிடுவதாக கடைசி வாய்ப்பாக குறைக்கப்பட்ட ஓவர்களுடன் போட்டியை இரவு 7:02 மணிக்கு தொடங்க முடியும் என்றாலும், மைதானத்தில் குளம் போல் நீர் தேங்கியிருந்ததால் போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என முன்கூட்டியே முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடைபெற உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ட்வீட்