அடுத்த செய்திக் கட்டுரை

அமெரிக்க ஒபன் டென்னிஸ்: நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச்
எழுதியவர்
Venkatalakshmi V
Sep 11, 2023
08:25 am
செய்தி முன்னோட்டம்
டென்னிஸ் விளையாட்டில் முக்கியமான போட்டியாக கருதப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷிய வீரர் டெனில் மெத்வதேவுடன் மோதினார்.
இந்த போட்டியில் ஆரம்பம் முதலே வெற்றிக்கான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், தொடரின் இறுதியில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில், டெனில் மெத்வதேவை வீழ்த்தி 24-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.
இது அவருடைய நான்காவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
36 வயதான நோவக் ஜோகோவிச், இப்போது 69 'சாம்பியன்' பட்டங்களை வென்றுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சாம்பியன் பட்டத்தை வென்றார் நோவக் ஜோகோவிச்
Novak hoists the 🏆 once again in New York! pic.twitter.com/LmZGzxT4Tp
— US Open Tennis (@usopen) September 11, 2023