Page Loader
டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எட்டிய நான்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் நிக்கோலஸ் பூரன்
டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எட்டினார் நிக்கோலஸ் பூரன்

டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எட்டிய நான்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார் நிக்கோலஸ் பூரன்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 19, 2025
08:50 pm

செய்தி முன்னோட்டம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களைக் கடந்து கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் நிக்கோலஸ் பூரன் எட்டு பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனையின் மூலம், கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோருக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய நான்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆனார். உலகளவில், இந்த சாதனையை எட்டிய 25வது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஸ்ஜி

எல்எஸ்ஜி சொதப்பல் பேட்டிங்

தனிப்பட்ட மைல்கல் இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ், ஆறு பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்ததால், அணி ஆரம்பத்தில் போராடியது. சிறிது நேரத்திலேயே நிக்கோலஸ் பூரனின் அவுட் அழுத்தத்தை மேலும் அதிகரித்தது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான முந்தைய போட்டியில் அரைசதம் அடித்து ஃபார்மை வெளிப்படுத்திய கேப்டன் ரிஷப் பண்ட், ஒன்பது பந்துகளில் வெறும் மூன்று ரன்களுக்கு எளிதாக ஆட்டமிழந்தார். 54/3 என்ற நிலையில் தத்தளித்த லக்னோவை ஐடென் மார்க்ரம் மற்றும் ஆயுஷ் படோனி மீட்டு ரன் சேர்த்து வருகின்றனர்.