Page Loader
பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி
பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை : 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு நியூசிலாந்து முதல் வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2023
04:50 pm

செய்தி முன்னோட்டம்

பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (ஜூலை 20) நியூசிலாந்தில் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி நார்வேயை எதிர்கொண்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர். நியூசிலாந்தின் ஸ்ட்ரைக்கர் ஹன்னா வில்கின்சன் தனது அணிக்கான கோலை அடித்ததோடு, 2023 பிபா மகளிர் உலகக்கோப்பையின் முதல் கோலை அடித்தவர் ஆனார். இந்த போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து மகளிர் கால்பந்து அணி பிபா உலகக்கோப்பையில், கடந்த ஐந்து சீசன்களில் விளையாடிய 15 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருந்த நிலையில், இது முதல் வெற்றியாகும். மேலும் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒட்டுமொத்தமாக சேர்த்து, நியூசிலாந்து கால்பந்து அணி பிபா உலகக்கோப்பையில் பெறும் முதல் வெற்றி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நியூசிலாந்து மகளிர் கால்பந்து அணி வெற்றி