லொசேன் டயமண்ட் லீக் 2024: நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்
2024 லொசேன் டயமண்ட் லீக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லொசேன் டயமண்ட் லீக்கில் கடைசிச் சுற்றில் 89.49 மீ தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கடந்த, ஆகஸ்ட் 2022இல், லாசேன் டயமண்ட் லீக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் சோப்ரா வரலாற்றை படைத்தார். அப்போது அவர் 89.08 மீ எறிந்தார். லொசேன் டயமண்ட் லீக்கில், கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தனது இறுதி முயற்சியில், 90.61 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இவர் 2024 பாரிஸில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான இறுதி சுற்றில் பீட்டர்ஸ், நீரஜை வீழ்த்தினார்
சோப்ராவின் இந்த சீசனின் சிறந்த முயற்சி, அவருக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தது. 90 மீட்டருக்கு குறைவாக இருந்தாலும், நீரஜ் சோப்ராவின் அசுரத்தனமான எறிதல், 89.49 மீ. சென்று அவர் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடைசியாக பீட்டர்ஸ் தனது சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் மூலம் இது ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியாக மாறியது. இறுதி நிலைகள்: ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) - 90.61 மீ, நீரஜ் சோப்ரா (இந்தியா) - 89.49 மீ, ஜூலியன் வெபர் (ஜெர்மனி) - 87.08 மீ. தனது இறுதி முயற்சியில் 90.61 மீ எறிந்த பீட்டர்ஸ், 2015 இல் கேஷோர்ன் வால்காட்டின் முந்தைய சாதனையான 90.16 மீ என்ற சாதனையை முறியடித்தார்.