
ஐபிஎல் 2023 : பும்ராவுக்கு பதிலாக தமிழ்நாடு அணி வீரரை ஒப்பந்தது செய்த மும்பை இந்தியன்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஜஸ்பிரித் பும்ரா இன்னும் காயத்திலிருந்து மீளாததால் அவருக்கு பதிலாக ஐபிஎல் 2023இல் தமிழ்நாடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
2022 செப்டெம்பர் முதலே பும்ரா உடற்தகுதியை பெற முடியாமல் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளவைச் சேர்ந்த 31 வயதான சந்தீப் வாரியர், உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் கேரள அணிக்காக விளையாடினாலும், 2021 முதல் தமிழ்நாடு அணியில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல்லை பொறுத்தவரை கேகேஆர் அணிக்காக அவர் ஐந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய சந்தீப் வாரியர், இன்றுவரை 68 டி20 போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சந்தீப் வாரியார் ஒப்பந்தம்
🚨 Mumbai Indians sign Sandeep Warrier as replacement for Jasprit Bumrah for IPL 2023#IPL2023 @mipaltan pic.twitter.com/Q6iH2Q18G2
— RevSportz (@RevSportz) March 31, 2023