வைரலாகும் எம்எஸ் தோனியின் இளம் வயது புகைப்படங்கள்!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் எம்எஸ் தோனியின் இளவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. டிவிட்டரில் வெளியாகியுள்ள ஒருபதிவில் தோனியின் சிறுவயது முதல் இந்திய கிரிக்கெட் அணியில் அவரது இளமைக்காலம், தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் இளம் வயது படங்கள் இடம் பெற்றுள்ளன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023 தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 23) விளையாடும் நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்சுடன் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.