மீண்டும் களத்தில் நொண்டிய தோனி! கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி பேட்டிங் செய்தபோது நொண்டியபடி ஓடியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருகட்டத்தில் 126/6 என தத்தளித்த நிலையில் தோனி களமிறங்கினார்.
தோனி 20ரன்களும், அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஜடேஜா 21 ரன்களும் எடுத்ததால் சென்னை அணி டெல்லிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்து வெற்றியும் பெற்றது.
எனினும் பேட்டிங்கில் தோனி ஓடும்போது நொண்டியபடி இருந்ததை இர்பான் பதான் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சில போட்டிகளுக்கு முன்பும் இதேபோல் அவர் நொண்டியபடி இருந்த நிலையில், தற்போதும் நொண்டியபடி இருப்பதால், காவயத்தால் வெளியேறும்படி ஆகிவிடுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Seeing Dhoni limping thru running between the wickets breaks my heart. Have seen him run like a cheetah.
— Irfan Pathan (@IrfanPathan) May 10, 2023