Page Loader
'ஓய்வா.. நான் சொல்லவே இல்லையே'! தோனியின் கருத்தால் ரசிகர்கள் குஷி!
இது தனது கடைசி சீசன் என கூறவேயில்லை என தோனி கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

'ஓய்வா.. நான் சொல்லவே இல்லையே'! தோனியின் கருத்தால் ரசிகர்கள் குஷி!

எழுதியவர் Sekar Chinnappan
May 03, 2023
06:00 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023க்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக உள்ள நிலையில், அதை முடித்து வைக்கும் விதமாக அவரே கருத்து தெரிவித்துள்ளார். புதன்கிழமை (மே 3) பிற்பகல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுடனான தனது அணியின் மோதலின் போது டாஸ் போடும்போது வர்ணனையாளர் டேனி மோரிசன், கடைசி சீசனை எப்படி அனுபவித்து விளையாடி வருகிறீர்கள் என தோனியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தோனி, "இது எனது கடைசி சீசன் என்று நீங்கள் தான் கூறி வருகிறீர்கள். நான் அப்படி கூறவில்லை." எனக் கூறினார். இதனால் அவர் இந்த சீசனோடு ஓய்வு பெற மாட்டார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

embed

Twitter Post

#BREAKING | "இது எனது கடைசி சீசன் என நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள்.. நான் கிடையாது" - சி.எஸ்.கே. கேப்டன் தோனி#SunNews | #MSDhoni | #ChennaiSuperKings | @msdhoni pic.twitter.com/cQkZpaEqJF— Sun News (@sunnewstamil) May 3, 2023