
IPL 2024 : எம்எஸ் தோனியை அணியில் தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், வரவிருக்கும் சீசனில் எம்எஸ் தோனி மீண்டும் களமிறங்குவார் என்பது உறுதியாகியுள்ளது.
டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில், தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களை வெளியிடுவதற்கான கடைசி தேதியாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சிஎஸ்கே இன்று வெளியிட்ட அறிவிப்பில் பென் ஸ்டோக்ஸை வெளியிட்டது மட்டுமல்லாமல் மேலும் பல வீரர்களையும் வெளியேற்றியுள்ளது.
MS Dhoni retained by Chennai Super kings for 2024 IPL
சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்ட முழு வீரர்களின் பட்டியல்
டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, ஷுப்ரான்சு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங் மற்றும் சிசண்டா மகலா ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்படும் மற்ற வீரர்கள் ஆவர்.
ஐபிஎல் 2023 ஏலத்தில் ஜேமிசனை எடுத்தாலும், அவர் காயம் காரணமாக அவர் சீசனை தவறவிட்டார்.
மகலா அவருக்குப் பதிலாக வந்த நிலையில், அவரும்கூட விடுவிக்கப்பட்டார்.
அதேசமயம், எம்எஸ் தோனி, மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷைக்யா ரஹானே, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.