LOADING...
முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்
முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது குறித்து கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்

முகமது ஷமி தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறாதது ஏன்? கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
05:22 pm

செய்தி முன்னோட்டம்

ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வரும் நிலையில், கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளாகியிருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிதான். பெங்கால் அணிக்காக அவர் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பிறகும், அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், வீரர்களைத் தேர்வு செய்வதில் உள்ள சவாலைக் குறிப்பிட்டார்.

விபரம்

ஷுப்மன் கில் பேச்சின் விபரம்

ஷுப்மன் கில் தனது பேட்டியில், "அவரைப் போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் அதிகம் இல்லை. ஆனால், தற்போது விளையாடும் ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற வீரர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஷமி போன்ற ஒரு வீரரை அணியில் இருந்து நீக்குவது சில சமயங்களில் மிகவும் கடினமானதுதான். ஆனால், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் திட்டமிட வேண்டும்," என்று கூறினார். 35 வயதான முகமது ஷமி, கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகுத் திரும்பியிருந்தாலும், இந்த ரஞ்சி கோப்பை சீசனில் இரண்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது, அவரது திறமை இன்னும் மங்கவில்லை என்பதை நிரூபிக்கிறது.

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, "முகமது ஷமியை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதைத் தடுக்க எந்தக் காரணமும் இல்லை." என்று தேர்வுக்குழுவினரைக் கேள்வி எழுப்பினார். இருப்பினும், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், பணிச்சுமை மேலாண்மை மற்றும் நீண்ட காலத் திட்டமிடல் போன்ற காரணங்களைக் கூறி, இந்தியா vs தென்னாப்பிரிக்கா தொடரில் முகமது ஷமியை ஒதுக்கியுள்ளார். எதிர்காலத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை வளர்ப்பதற்கும், முகமது ஷமியின் அனுபவத்தைச் சமநிலைப்படுத்துவதற்கும் தேர்வுக்குழுவுக்கு இடையே உள்ள இக்கட்டான முடிவை இது காட்டுகிறது.