
ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடர் மீண்டும் தொடங்கினாலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்த சீசனில் மீண்டும் இணைய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய ஊடங்களில் இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை (மே 11) அன்று ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்டார்க், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக இந்தியாவிற்கு திரும்பி வர மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறியதைத் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்ததால் மே 9 அன்று ஐபிஎல் நிறுத்தப்பட்டது.
தற்போது, போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும், பல சர்வதேச வீரர்கள் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.
ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்க்க வாய்ப்பு
மிட்செல் மார்ஷின் மேலாளர், அவர் இந்த சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட அவர் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இணைய மாட்டார் என உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டார்க், இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக முக்கிய வீரராக இருந்து 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் உள்ளிட்ட பிற ஆஸ்திரேலிய வீரர்களும் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளைத் தவிர்க்க வாய்ப்புள்ளது.
ஹைதராபாத் பிளேஆஃப் போட்டியில் இருந்து வெளியேறியதால், ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தயாரிப்புகளில் இரு வீரர்களும் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.