ஆசியாவின் சிறந்த தடகள வீரராக மதுரை செல்வத்திருமாறன் தேர்வு
செய்தி முன்னோட்டம்
மதுரை மாவட்டத்தில் திருமாறன் என்னும் விவசாயின் மகன் தான் செல்வ திருமாறன்.
இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கியம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தற்போது கியூபாவினை சேர்ந்த பயிற்சியாளரான யோண்ட்ரிஸ் என்பவரிடம் பயிற்சி பெற்று சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடந்த கிராண்ட் பிக்ஸ் சர்வதேசப்போட்டியில் ஆடவர் பிரிவில் மும்முறை நீளம் தாண்டும் போட்டியில் 16.78 மீட்டர் தூரத்தினைத்தாண்டி தங்கத்தினை வென்றுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
ஏசியன் அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில், 20 வயத்துக்குட்பட்டோருக்கான தடகள பிரிவில் செல்வதிருமாறன் சாதனை செய்துள்ளார்.
அதன்படி, 2023ம்ஆண்டின் ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வதிருமாறன் தேர்வுச்செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தடகள போட்டியில் வென்ற தமிழக இளைஞன்
#SportsUpdate | ஆசியாவின் சிறந்த தடகள வீரராக செல்வா திருமாறன் தேர்வு!#SunNews | #AsianAthleticsAssociation | #SelvaThirumaran pic.twitter.com/oiC1FL8PbU
— Sun News (@sunnewstamil) July 5, 2023