
இலங்கை பிரீமியர் லீக் 2023 : கிரிக்கெட் மைதானத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த பாம்பு
செய்தி முன்னோட்டம்
இலங்கை பிரீமியர் லீக்கின் டி20 கிரிக்கெட் குழுநிலை ஆட்டத்தில் திங்கட்கிழமை (ஜூலை 31) அன்று காலி டைட்டன்ஸ் அணி தம்புள்ளை ஆராவை எதிர்கொண்டது.
கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, ஷாகிப் அல் ஹசன் தனது ஓவரைத் தொடங்குவதற்கு சற்று முன்பு, பவுண்டரி லைன் அருகே பாம்பு உள்ளே புகுந்தது.
இருப்பினும், சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டு ஊழியர்கள் பாம்பை அகற்றிய பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது.
இதற்கிடையே போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காலி டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 180 ரன்கள் எடுத்த நிலையில், தம்புள்ளை ஆராவும் 180 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆனது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் காலி டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த பாம்பு
We could only capture this 𝗛𝗶𝘀𝘀𝘁𝗼𝗿𝗶𝗰 moment due to our world-class 𝙎𝙣𝙖𝙠𝙤𝙢𝙚𝙩𝙧𝙚!#LPL2023onFanCode #LPL pic.twitter.com/lhMWZKyVfy
— FanCode (@FanCode) July 31, 2023