Page Loader
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த 2வது அயர்லாந்து வீரர் : லோர்கன் டக்கர் சாதனை
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த 2வது அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்த லோர்கன் டக்கர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த 2வது அயர்லாந்து வீரர் : லோர்கன் டக்கர் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Apr 06, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் லோர்கன் டக்கர் சதம் அடித்து அசத்தினார். 26 வயதான அவர், தனது முதல் டெஸ்டில் விளையாடி, இரண்டாவது இன்னிங்ஸில் 51/5 என்ற நிலையில் அயர்லாந்து அணி தவித்துக் கொண்டிருந்த நிலையில் களமிறங்கி அயர்லாந்து அணியை மீட்டெடுக்க உதவினார். டக்கர் அபாரமாக விளையாடி சதமடித்து அயர்லாந்தை 200 ரன்களை கடக்க செய்த நிலையில், 108 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இதன் மூலம் டக்கர் டெஸ்ட் சதம் அடித்த இரண்டாவது அயர்லாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த அயர்லாந்து வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்து வீரர்கள் சதமடிப்பது என்பது மிகவும் அபூர்வமான ஒன்றாக உள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன், கெவின் ஓ பிரையன் டெஸ்ட் சதம் அடித்த ஒரே அயர்லாந்து வீரராக இருந்தார். 2018ல் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் இந்த சாதனையை செய்தார். அந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 118 ரன்கள் எடுத்தார். இதில் அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், தற்போது வங்கதேசத்துக்கு எதிராக டக்கர் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த நிலையில், அயர்லாந்து 3வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் முன்னிலையில் ஆடி வருகிறது.