
அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு
செய்தி முன்னோட்டம்
பிபா கால்பந்து உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியின் பதவியை 2026 உலகக் கோப்பை வரை நீட்டித்துள்ளதாக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு திங்களன்று (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
1986க்கு பிறகு முதல் முறையாக 2022இல் அர்ஜென்டினா அணி யோனல் ஸ்கலோனியின் பயிற்சியின் கீழ் தான் உலகக்கோப்பையை வென்றது.
இதனால் அவரது சேவையை அடுத்த உலகக்கோப்பை வரை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கிளாடியோ டாபியாவுடன் லியோனல் ஸ்கலோனி பாரிசில் சந்தித்து பேசினார்.
பின்னர் பதவி நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. லியோனல் ஸ்கலோனி, இதற்காக அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு ட்வீட்
CONFIRMADO: Hay @lioscaloni para rato 😉
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) February 27, 2023
¡Seguimos! 💪🇦🇷#ScalonetaModoOn #TodosJuntos pic.twitter.com/4YM6R7ZGW8