அடுத்த செய்திக் கட்டுரை
ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்
எழுதியவர்
Sekar Chinnappan
May 05, 2023
04:45 pm
செய்தி முன்னோட்டம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், தொடை காயத்தால் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
மேலும் ஜூன் மாதம் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளதோடு, ஆசிய கோப்பை/ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இணைய முயற்சி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அணியில் கே.எல்.ராகுலின் கேரியர் சமீபகாலமாக பின்னடைவை சந்தித்து வருகிறது.
2023 பார்டர் கவாஸ்கர் தொடரில் பாதியிலேயே இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.