Page Loader
'அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் களத்திற்கு திரும்புவேன்' : கே.எல்.ராகுல் ட்வீட்
காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கே.எல்.ராகுல் ட்வீட்

'அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் களத்திற்கு திரும்புவேன்' : கே.எல்.ராகுல் ட்வீட்

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான மே 1ஆம் தேதி நடந்த போட்டியின் போது தனது தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (மே 9) இந்த அறுவை சிகிச்சை நடந்ததாக தெரிவித்துள்ள கே.எல்.ராகுல், அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் களத்திற்குத் திரும்புவதற்கு ஆவலுடன் இருப்பதாகவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். முன்னதாக, காயம் காரணமாக நடப்பு ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகினார். இதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷனை பிசிசிஐ சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post