LOADING...
ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்

ஐபிஎல் 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2025
06:10 pm

செய்தி முன்னோட்டம்

மூன்று முறை ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) சீசனுக்கு முன்னதாக, முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை தனது புதிய உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த அறிவிப்பை கேகேஆர் நிர்வாகம் வியாழக்கிழமை (நவம்பர் 13) வெளியிட்டுள்ளது. உயர் மட்டத்திலான வீரர் மற்றும் பயிற்சியாளராக ஷேன் வாட்சனின் அனுபவம், வரவிருக்கும் சீசனில் அணிக்கு மீண்டு வர உதவுவதுடன், குழுவின் கலாச்சாரம் மற்றும் தயாரிப்புக்கு மிகப் பெரிய மதிப்பைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

ஷேன் வாட்சனின் பின்னணி

கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷேன் வாட்சன், ஆஸ்திரேலியாவுக்காக 10,950 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் 291 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 145 போட்டிகளில் விளையாடியுள்ளார். கேகேஆர் அணியில் இணைவதற்கு முன்னர், வாட்சன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இதே போன்ற பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பயிற்சியாளர் பொறுப்பிற்கு வாட்சன் திரும்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஜூலை 2025-இல் சந்த்ரகாந்த் பண்டிட்டிடம் இருந்து பிரிந்த பிறகு, அபிஷேக் நாயர் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை கேகேஆர் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.