
'எதிர்பார்க்கல, செம ஹேப்பி'; ஐபிஎல் ஏலத்தில் வைரலாகும் காவ்யா மாறன் புகைப்படம்
செய்தி முன்னோட்டம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) துபாயில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மினி ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான காவ்யா மாறன், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.1.5 கோடிக்கு கையகப்படுத்தினார்.
இந்த ஒப்பந்தத்தை முடித்த பிறகு அவர் வெற்றிச் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2021இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக முதன்முதலில் ஐபிஎல்லில் நுழைந்த ஹசரங்க, டி20 வடிவத்தில் ஒரு மதிப்புமிக்க சொத்தாக கருதப்படும் நிலையில், அவரை அடிப்படை விலையிலேயே எடுத்தது காவ்யா மாறனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வனிந்து ஹசரங்காவை அடிப்படை விலைக்கு வாங்கியதை அடுத்து, எக்ஸ் தளத்தில் ஹசரங்கா டிரெண்ட் ஆகி வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
காவ்யா மாறனின் வைரலாகும் புகைப்படம்
Kavya Maran after sealing Hasaranga for just 1.5cr. pic.twitter.com/ZOVPba5LXH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 19, 2023