KKR vs RCB: ஆட்டத்திற்கு முன் நட்புடன் உரையாடிய கோலி மற்றும் கம்பீரின் வீடியோ வைரல்
ஏப்ரல் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் KKR VS RCBஇன் இந்தியன் பிரீமியர் லீக்(IPL) 2024 போட்டி நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இதயப்பூர்வமாக பேசிக்கொள்ளும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் கிரிக்கெட் மைதானத்தில் நின்று மகிழ்ச்சியுடன் பேசி சிரித்து கொண்டிருப்பது ரசிகர்களின் மனதில் இதத்தை பரப்பியுள்ளது. சமீப காலமாக கம்பீரும் கோலியும் நன்றாக நட்பாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பெங்களூருவுக்கு எதிரான கொல்கத்தா போட்டியின் போது, கோலியும் கம்பீரும் கட்டிப்பிடித்து தங்கள் நட்பை வெளிப்படுத்தினர்.