பிபா மகளிர் உலகக்கோப்பை : 4-0 கோல்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்
செய்தி முன்னோட்டம்
திங்களன்று (ஜூலை 31) நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் ஜப்பான் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினைத் தோற்கடித்து அசரவைத்துள்ளது.
முன்னதாக, போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் கால்பந்து அணியின் வீராங்கனைகள், போட்டியின் முதல் பாதியில் 3 கோல்கள் அடித்து 3-0 என முன்னிலை பெற்றனர்.
மேலும் போட்டியின் இரண்டாம் பாதியில் மேலும் ஒரு கோல் அடித்து, இறுதியில் 4-0 என கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பிபா மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் ஸ்பெயினுக்கு எதிராக இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ள ஜப்பான், தற்போதுதான் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 2022'இல் ஜப்பான் ஆடவர் அணியும் முதல்முறையாக ஸ்பெயினை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஜப்பான் அபார வெற்றி
Japan produced a scintillating display to defeat Spain 4-0 and secure top spot in Group C! 🇯🇵@JFA_Nadeshiko | #FIFAWWC
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 31, 2023