Loading...
ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து தொடர் தொடக்கம்: முழு அட்டவணை மற்றும் நேரலை விவரம்
இந்தியன் சூப்பர் லீக் 2026-27 கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது.

ஐஎஸ்எல் 2026-27 கால்பந்து தொடர் தொடக்கம்: முழு அட்டவணை மற்றும் நேரலை விவரம்

எழுதியவர் Vasuki
Oct 10, 2026
01:15 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்தியன் சூப்பர் லீக் (ISL 2026-27) கால்பந்து தொடரின் புதிய சீசன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. கடந்த முறை குறுகிய காலத் தொடராக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை மீண்டும் பழையபடி ஹோம்-அவே முழு வடிவில் தொடர் நடைபெறுகிறது. நடப்பு சீசனில் பிளே-ஆஃப் மற்றும் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 163 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதற்கட்டமாக அக்டோபர் 10 முதல் 2027 ஜனவரி 17 வரை 14 மேட்ச்டேக்களில் 78 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.

மணிப்பூர்  அணி

போட்டியில் களம் காணும் 13 அணிகள்

நடப்பு ஐஎஸ்எல் தொடரில் பெங்களூரு எஃப்சி, ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி, எஃப்சி கோவா, சென்னையின் எஃப்சி, இன்டர் காசி, கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி, சர்ச்சில் பிரதர்ஸ், மும்பை சிட்டி எஃப்சி, நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட், பஞ்சாப் எஃப்சி, ஒடிசா எஃப்சி மற்றும் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி ஆகிய 13 அணிகள் களமிறங்குகின்றன.

மேலும் இத்தொடர் முதன்முறையாக மணிப்பூரின் இம்பால் நகரில் தடம் பதிக்கவுள்ளது.

அங்குள்ள குமான் லம்பாக் மைதானத்தில் நவம்பர் 24 அன்று நார்த்ஈஸ்ட் யுனைடெட் மற்றும் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணிகள் மோதுகின்றன.

தொடக்க நாள் ஆட்டங்கள்

தொலைக்காட்சி மற்றும் நேரலை விவரம்

இன்று (அக்டோபர் 10) தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் மாலை 5:00 மணிக்கு பெங்களூரு எஃப்சி மற்றும் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி அணிகள் மோதுகின்றன.

அதனைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு கோவாவின் படோர்டா மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் எஃப்சி கோவா மற்றும் சென்னையின் எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் ஐஎஸ்எல் 2026-27 தொடரின் நேரலை ஒளிபரப்பை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

இணைய வழியில் சோனிலைவ் செயலி மற்றும் இணையதளத்தில் போட்டிகள் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.

மேலும், வரலாற்றிலேயே முதன்முறையாக, ரசிகர்களுக்குக் கட்டணமில்லா அனுபவத்தை வழங்கும் வகையில், யூடியூப் தளத்திலும் அனைத்து போட்டிகளும் இலவசமாக நேரலை செய்யப்பட உள்ளன.

ADVERTISEMENT