Loading...
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடித்த இஷான் கிஷன்: 61 ரன்கள் விளாசி 2000 ரன்களை கடந்து சாதனை
61 ரன்கள் விளாசி 2000 ரன்களைக் கடந்த இஷான் கிஷன் சாதனை

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடித்த இஷான் கிஷன்: 61 ரன்கள் விளாசி 2000 ரன்களை கடந்து சாதனை

எழுதியவர் Vasuki
Nov 01, 2026
06:10 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சிக்னேச்சர் 'ஹெலிகாப்டர் ஷாட்'டை நேர்த்தியாக ஆடி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ஹேமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தொடக்க வீரர்கள் சொதப்பி வெளியேறிய இக்கட்டான சூழலில் களமிறங்கி ருத்ரதாண்டவம் ஆடிய இஷான் கிஷன், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்

சரவெடி அரைசதம்

போட்டியின் 9-வது ஓவரை நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர் வீசியபோது, அதன் மூன்றாவது பந்தில் கிரீஸின் பின்னால் சென்று மிடில் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தை மின்னல் வேகத்தில் சுழற்றி தோனியின் புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் மூலம் மிட்-விக்கெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் இஷான் கிஷன்.

களத்தில் நின்ற ரசிகர்களுக்கு தோனியை மீண்டும் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திய இஷான் கிஷன், வெறும் 28 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 190.62 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் இது அவருக்கு 14-வது அரைசதமாகும்.

2000 ரன்கள் மைல்கல்

அதிவேக சாதனைப் பட்டியல்

இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் என்ற பெருமைமிக்க மைல்கல்லை இஷான் கிஷன் எட்டினார்.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்த 7-வது இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சிறப்பை அவர் அடைந்துள்ளார்.

இதுவரை 69 போட்டிகளில் களமிறங்கியுள்ள இவர், 31.01 சராசரியுடன் 2016 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 14 அரைசதங்களும் அடங்கும்.

எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டிய 3-வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் (1,345 பந்துகள்) பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் 1,024 பந்துகளில் எட்டிய அபிஷேக் சர்மா முதலிடத்திலும், 1,164 பந்துகளில் எட்டிய சூர்யகுமார் யாதவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ADVERTISEMENT

2026-ல் பார்ம்

மிரட்டல் ஆட்டம்

மறுபுறம் சஞ்சு சாம்சன் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த சூழலில், ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார் இஷான் கிஷன்.

நடப்பு 2026-ஆம் ஆண்டில் அபாரமான பார்மில் விளங்கும் இஷான் கிஷன், இந்த ஆண்டில் மட்டும் 37 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 35.88 சராசரி மற்றும் 171.58 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டுடன் 1,220 ரன்களைக் குவித்து இந்திய அணியின் தவிர்க்க முடியாத தூணாக உருவெடுத்துள்ளார்.

ADVERTISEMENT